பஞ்சாங்க விளக்கங்கள்

  • |

    சிராத்த திதி

    சிரார்த்த திதி என்பது மறைந்த நமது முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்வதற்கான திதியாகும். இது திதி நிர்ணய விதிப்படி நிர்ணயிக்கப்படுவது. மறைந்த பெற்றோரின் சிரார்த்த திதியானது அவர்கள் இறந்த ஆங்கிலத் தேதிக்கு சம்பந்தப்பட்டதல்ல. நமது இந்து ஆகம முறைப்படி தமிழ் தேதிகளும் திதியும் சம்பந்தப்பட்டதாகும். சௌரமான மாதங்களின்படி தமிழ்நாடு, கேரளாவிலும் சாந்திரமான மாதங்களின்படி ஆந்திரா, கர்நாடகாவிலும் (தெலுங்கு, கன்னடர்கள்) கடைபிடிக்கப்படுகின்றன. எனவே அவரவர் குல வழக்கப்படி சிரார்த்தங்களை கடைபிடிக்க வேண்டியது. சௌரமானக்காரர்கள் அவர்கள் இறந்த…

  • |

    பஞ்சாங்க விஷயங்கள்

    மலமாதம்: ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படுகிறது. மல மாதங்களில் சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் வஸந்த ருதுவான சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அம்மாதங்களுக்கு மலமாத தோஷம் கிடையாது. திரிதினஸ்ருக்: ஒரு திதியோ, நட்சத்திரமோ, யோகமோ மூன்று நாட்களில் சம்பந்தப் பட்டு இருப்பது திரிதின ஸ்புருக். ஒரே நாளில் மூன்று திதிகள்,…

  • |

    பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்

    பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்: ஒரு நாள் 30 முகூர்த்தங்கள் கொண்டது. பகல் 15, இரவு 15 முகூர்த்தங்கள். ஒரு முகூர்த்தம் என்பது 2 நாழிகை அதாவது 48 நிமிடங்கள். 29 வது முகூர்த்தத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என பெயர். அது சூ¡¢ய உதயத்திற்கு 1 மணி 36 நிடங்களுக்கு முன் ஆரம்பித்து சூரிய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பாக முடியும். சூரிய உதயம் காலை 7.00 மணி எனில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை…

  • |

    பஞ்சாங்க அடிப்படைகள்

    பஞ்சாங்கம்கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை…