தைப்பொங்கல்

பொங்கல் என்றால் என்ன: பொங்கல் என்பது பொதுவாக தை மாதம் முதல் தேதி தமிழ் நாட்டில், குறிப்பாக விவசாயிகளால் கொண்டாடப்படும் திருவிழா. முந்தைய காலங்களில் ஆறு மாத நெற்பயிர்கள். ஆடியில் விதைத்து மார்கழி கடைசியில் அறுவடை செய்வர். வருடம் ஒரு முறை தான் முக்கிய விவசாயம், முக்கிய வருமானம். விவசாயிகள் புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புது அரிசியை கொண்டு புது அடுப்பில் வைத்து பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து வழிபடும் விழா. அடுத்த நாள் விவசாயத்திற்கு, உழவுக்கு உறுதுனை செய்த மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல். தான் வளர்த்த, பயன்படுத்திய விலங்கிற்கு பொங்கலிட்டு விழா எடுத்த ஒரே இனம் தமிழினம். அடுத்த நாள் பெரியோர்கள், உற்றார் உறவினர்கள் நண்பர்களை கண்டு, கலந்து பேசும் நாள் (கானும் பொங்கல்). குடும்ப பெரியோர்களிடம் தங்களின், குடும்பத்தின் எதிர்கால விஷயங்களைப் பற்றி பேசி ஆலோசனைகளும் ஆசீர்வாதமும் பெற்று அடுத்த வருடம் குடும்பத்தில் என்ன செய்யலாம் (திருமணம் செய்தல், புது வீடு கட்டுதல், வீட்டை புதுப்பித்தல், நிலம் வாங்குவது, புதிய முதலீடு செய்தல், கடன் தீர்த்தல்) என்பதை பற்றிய முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள். தைப்பொங்கலுக்கு முதல் நாள் ஒரு வருடம் பழமையான, பயன்படுத்த முடியாத பொருட்களை மாற்றி (போக்கி) அல்லது தேவையான புது பொருட்கள் வாங்கி கொள்கிற, செய்து கொள்கிற நாள் போகி பண்டிகை.

பொங்கல் தேதி, பொங்கல் வைக்கும் நேரம்: தமிழ் மாதங்களின் ஆரம்பம் சூரியன் ராசிகளில் பிரவேசிக்கும் சங்கராந்தி நேரத்தை கொண்டு முடிவு செய்யப்படுகிறது. பகல் அகஸுக்கு (சூரிய அஸ்தமனம்) முன் சங்கராந்தி நடந்தால் அன்றே மாத ஆரம்பம். அகஸுக்கு பின் சங்கரமானால் அடுத்த நாள் மாத ஆரம்பம், முதல் தேதி. தை மாதம் ஒன்றாம் தேதி என்றைக்கு என்பது சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நேரத்தை வைத்து பஞ்சாங்கங்களில் முடிவு செய்யப்படுகிறது. மகர சங்கராந்தி என்பது காலையிலும் நடக்கலாம் மாலையிலும் நடக்கலாம் நடு இரவிலும் நடக்கலாம். மகர சங்கராந்தி மதியமா, மாலையிலா என்பதை பற்றி கவலை இல்லை. அதனால் தை முதல் தேதி எது என்று முடிவு செய்யப்பட்டு விட்ட பிறகு தை முதல் தேதியில் சூரிய உதயத்திற்கு பிறகு உச்சிப் பொழுதிற்குள் பொங்கல் வைப்பது தான் சரியான முறை பொங்கல் வைக்கும் நேரத்திற்கும் மகர சங்கராந்தி நடக்கும் நேரத்திற்கும் சம்பந்தமில்லை. சங்கராந்தி ஆன பிறகுதான் தை மாதம் பிறக்கிறது, அதன் பிறகு தான் பொங்கல் வைக்க வேண்டும் என்பது தவறான கருத்து. சில வருடங்களில் மகர சங்கராந்தி மாலை 6 மணிக்கு நடக்கும். பொதுவாக தமிழ் நாட்டில் தை மாதம் மாலை 6 மணிக்கு மேல் தான். 6 மணிக்கு சூரிய அஸ்தமனத்திற்கு முன் சங்கராந்தி ஏற்பட்டு விடுவதால் அன்றே தை முதல் தேதி என்று முடிவாகிவிடும். அதனால் அன்று 6 மணிக்கு மேல் அதாவது சங்கராந்திக்கு பிறகு, மாதம் பிறந்த பிறகு பொங்கல் வைத்தால் எப்போது பொங்கல் பொங்கி சூரியனுக்கு படைப்பது. சூரியன் மறைந்த பிறகு இரவிலா? அல்லது அடுத்த நாள் தை 2ஆம் தேதி பொங்கல் வைப்பதா?

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமன வரை உள்ள பகல் அளவை கணக்கிட்டு அகஸ் அது என்று பெயர் சங்கராந்தி சூரிய அஸ்தமனத்திற்கு முன் அகசுக்குள் ஏற்பட்டால் அன்றே மாதத்தின் முதல் தேதி என்றும் அகசுக்கு பின் சங்கராந்தி ஏற்பட்டால் அடுத்த நாள் மாதத்தில் முதல் நாள் என்றும் முடிவு செய்வார்கள் அப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் முடிவு செய்யும்போது சில மாதங்கள் 29 நாட்களும் சில மாதங்கள் 30 31 32 நாட்களும் கூட இருக்கும் அதனால் தை மாதம் சில வருடங்களில் 29 நாட்கள் சில வருடங்களில் 30 நாள் வரும் அதேபோல மார்கழி சில வருடங்களில் 29 நாட்களும் அடுத்த நாள் தை 1 என்று வரும் சில வருடங்களில் மார்கழி 30 நாள் அடுத்து நாள் கை ஒன்று என்று வரும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தஞ்சாவூரின் சூரிய உதய அஸ்தமனத்தை வைத்தே மாதங்களின் நாட்களை முடிவு செய்கிறார்கள் அதேபோல மற்ற நாடுகளுக்கும் தமிழ் மாத தேதிகள் தமிழ்நாட்டில் உள்ள அந்த தேதிகளையே பயன்படுத்த முடியாது ஏனென்றால் அந்தந்த நாடுகளுக்கான நேரம் மண்டலங்கள் மாறும் தமிழ்நாட்டுக்கும் மற்ற நாட்டுக்கும் மணி வித்யாசங்கள் இருக்கிறது அடுத்ததாக சூரிய உதயம் அஸ்தமனத்திலும் பெரிய வித்தியாசங்கள் வரும் உதாரணமாக லண்டனுக்கு சில மாதங்களில் சுமார் ஐந்து மணிக்கே சூரிய உதயம் ஆகும் இரவு எட்டு மணிக்கு அஸ்தமனமாகும் சில மாதங்களில் காலை 8 மணிக்கு சூரிய உதயம் ஆகி மாலை 4:30 மணிக்கு அஸ்தமனம் ஆகிவிடும் அப்படி இருக்கும் போது லண்டனில் தமிழ்நாட்டு தேதியை பின்பற்ற முடியாது லண்டன் சூரிய உதயம் அஸ்தமனம் பகலாக சங்கராந்தி நடக்கும் நேரம் இவைகளை கொண்டு மாதத்தின் முதல் நாளில் முடிவு செய்ய வேண்டி இருக்கும் அதனால் தமிழ்நாட்டிற்கு முதல் நாளே கூட அங்கு மாத ஆரம்பமாகும் இப்படி ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் சூரிய உதய அஸ்தமனத்தை வைத்து முடிவு செய்ய வேண்டும் அடுத்ததாக ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற மிகப் பெரிய நாடுகளில் நான்கு நேர மண்டலங்கள் இருக்கின்றன அதன் காரணமாகவும் ஒரு நேர மண்டலத்தில் இன்று மாதா ஆரம்பம் என்றும் இன்னொரு நேரம் மண்டலத்தில் மறுநாள் மாதா ஆரம்பம் என்றும் ஆகும் அதை பொறுத்து வரதங்கள் விசேஷங்கள் இவைகளும் கூட தேதி மாறலாம்

அடுத்த விஷயம் பஞ்சாங்கம் சம்பந்தப்பட்டது பஞ்சாங்கத்தில் வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் என்று இரண்டு முறைகள் உள்ளது இவைகளிலும் சங்கராந்தி நடக்கும் வித்தியாசப்படும் தமிழ்நாடு மலேசியா சிங்கப்பூரில் நீண்ட காலமாக வாக்கிய பஞ்சாங்கம் விரதங்கள் விசேஷங்களை முடிவு செய்ய நடைமுறையில் இருக்கிறது மற்ற உலக நாடுகள் எல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படி தான் மாத தேதிகள் விரதங்கள் விசேஷங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது திருக்கணித பஞ்சாங்கம் தான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது திருத்தங்கள் செய்யப்பட்டது வாக்கிய பஞ்சாங்கத்தில் பல நூறு வருடங்களாக திருத்தங்கள் செய்யப்படாமல் இருக்கிறது அதனால் வெளிநாடுகளில் திருக்கணித பஞ்சாங்கத்தை மட்டுமே பயன்படுத்துவது சிறப்பு அங்கு வாக்கிய பஞ்சாங்கத்தை வைத்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை இந்தியா மலேசியா சிங்கப்பூரில் மட்டும் வாக்கிய பஞ்சாங்க படியும் உலகின் மற்ற நாடுகளுக்கு தைப் பொங்கலும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது அதனால் தான் சில நாடுகளில் 15ஆம் தேதியும் சில நாடுகளில் ஜனவரி 14ஆம் தேதியும் தைப்பொங்கலாக முடிவு செய்யப்பட்டுள்ளது அதேபோல பொங்கல் வைக்கும் நேரமும் நாட்டுக்கு நாடு ஒரு நாட்டின் உள்ளேயே வேறு வேறு மண்டலக்கு இடையிலும் வித்தியாசம் இருக்கும் பொங்கல் வைக்கும் நேரத்தை முடிவு செய்ய அந்தந்த நகரத்தின் உடைய ராகு காலம் எமகண்டம் குளிகை போன்றவைகளை துல்லியமாக கணக்கிட வேண்டும் ஹோரை நேரங்களையும் துல்லியமாக கணக்கிட வேண்டும் ராகு காலம் எமகண்டம் குளிகை போன்றவர்களை தவிர்த்து விட்டு மற்ற நேரங்களை பொங்கல் வைக்க எடுத்துக் கொள்ளலாம் அதிலும் ஹோரையிலும் கோரையையும் எடுத்துக் கொள்வது நல்லது சுப காரியங்கள் அதாவது திருமணம் கிரகப்பிரவேசம் போன்றவை சுப ஹோரைகள் நல்லது புதன் சுக்கிரன் குரு சந்திரன் கோரைகள் சுப ஹோரைகள் சூரியன் சனி செவ்வாய் கோரைகள் அசுபகு வகைகள் இவைகளில் சுப காரியங்கள் செய்வது நல்லதல்ல அதே நேரம் ஒவ்வொரு போரைக்கும் ஒரு சில காரியங்கள் செய்வது நல்லது என்ற விதிமுறை இருக்கிறது அதன்படி சூர்யா முறையில் மருத்துவம் சம்பந்தப்பட்டவை மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்றவை நல்லது செவ்வாய் ஹோரையில் நெருப்பு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வது ஆயுதங்கள் ஆபரேஷன் போன்ற ரண சிகிச்சைகள் செய்வது நல்லது செங்கல் சூலை பற்ற வைப்பது அடுப்பு சம்பந்தப்பட்ட வேலைகள் நெருப்பைக் கொண்டு செய்யக்கூடிய வேலைகள் செவ்வாய் ஹோரையில் செய்யலாம் அந்த வகையில் பொங்கல் என்பது பொது அடுப்பில் நெருப்பு பொங்கல் செய்வது அது செவ்வாய் ஹோரையில் செய்வது நல்லது அடுத்து பொங்கல் என்பது சூரியனுக்கு படைப்பது சூரியனை வழிபடுவது அது தமிழ்நாட்டு விவசாயிகளின் திருவிழா அந்த படைகளை சூரிய ஓரத்தில் செய்வது சிறப்பு அதனால் பொங்கல் வைக்க சூரியனுக்கு படைக்க செவ்வாய் ஹோரையையும் சூரிய ஹோரையும் பயன்படுத்தலாம் மற்ற சுப ஹோரைகளையும் பயன்படுத்தலாம் அந்த வகையில் தான் பொங்கல் வைக்கும் நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது பொங்கல் என்பது சூரியனை வழிபடும் திருவிழா என்பதால் சூரியன் உதித்து வரும் நேரத்தில் செய்ய வேண்டும் ஏறும் பொழுதில் செய்ய வேண்டும் அதாவது உச்சிப் பொழுதிற்கு முன் பகல் உச்சிப் பொழுதிற்கு பிறகு சூரியனின் இறங்குமுகம் அது அவ்வளவு நல்லதல்ல குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பொங்கல் வைப்பது என்பது சரியல்ல இந்த காலகட்டத்தில் அதிகாலையிலேயே பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று விடுவதால் மாலையில் தான் ஓய்வு கிடைக்கும் என்பதாலும் நேரம் கிடைக்கும் என்பதாலும் இரவில் பொங்கல் வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது அப்படிப்பட்டவர்கள் உங்களை தவிர்க்கக்கூடாது என்பதற்காக இரவில் மாலையில் பொங்கல் வைக்கலாம் சரியான என்பது சூரிய உதயம் முதல் உச்சிப் பகல் வரை உள்ள நேரத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபடுவது தான்

பொங்கல் என்பது இந்து மத பண்டிகை அல்ல. இந்தும பண்டிகை என்றால் தீபாவளி போல இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட வேண்டும். அப்படி இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்படுகிறது இப்போது புலம்பெயர் தமிழர்கள் வாழக்கூடிய உலக நாடுகளில் எல்லாம் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அடுத்து பொங்கல் என்பது ஒருநாள் அல்ல போகிப் பண்டிகை தைப்பொங்கல் மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமாகி உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் மாட்டுப்பொங்கல் இந்தியாவின் மற்ற பகுதிகளில் கொண்டாடப்படுவதில்லை அதனால் பொங்கலுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை. இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமான பண்டிகையும் அல்ல பொங்கல் குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகளால் சூரியனை வழிபடவும் உழவுக்கு விவசாயத்திற்கு துணை செய்த மாடுகளுக்காக மாட்டுப் பொங்கலும் மற்றும் பெரியோர்கள் உற்றார் உறவினர்களை கண்டு பேசி மகிழும் காணும் பொங்கலும் சேர்ந்தது தமிழ்நாட்டில் நிலம் வைத்துக் கொண்டு விவசாயம் செய்கிற கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், மற்ற மதத்தவர்கள், தாய் மொழியால் வேறுபடுகிற தெலுங்கு பேசுபவர்கள், கன்னடம் பேசுபவர்கள் வடமொழி பேசுபவர்கள் என அத்தனை விவசாயிகளுமே கொண்டாட கூடிய திருவிழா. விவசாயம் இல்லாத மற்ற தொழில் செய்யக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த அத்தனை பேருமே ஒற்றுமையாக கொண்டாடும் திருவிழா.