பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்
பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்: ஒரு நாள் 30 முகூர்த்தங்கள் கொண்டது. பகல் 15, இரவு 15 முகூர்த்தங்கள். ஒரு முகூர்த்தம் என்பது 2 நாழிகை அதாவது 48 நிமிடங்கள். 29 வது முகூர்த்தத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என பெயர். அது சூ¡¢ய உதயத்திற்கு 1 மணி 36 நிடங்களுக்கு முன் ஆரம்பித்து சூரிய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பாக முடியும். சூரிய உதயம் காலை 7.00 மணி எனில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 5.24 முதல் 6.12 வரையுள்ள நேரம். இது தினசரி சூரிய உதயத்துக்கு தக்கபடி மாறும். இது ஆண்டவனை வழிபட, தியானம், யோகாசனம் செய்ய, மாணவர்கள் படிக்க உகந்த நேரம். பகலில் எட்டாவது முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் என பெயர். பொதுவாக 12.36 pm முதல் 1.24 pm வரையுள்ள நேரம். பிரம்ம, அபிஜித் முகூர்த்தங்களில் ஆயிரம் தோஷங்கள், குற்றங்கள் விலகும் என சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக தினமும் அந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் கிரக தோஷங்களின்றி சிறப்பாக வாழ்வார்கள் என அர்த்தமல்ல. திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுபமுகூர்த்த நாளிலும் சூரிய உதயத்திற்கு பிறகு பகலிலும் அதற்கான லக்ன நேரத்திலும் செய்ய வேண்டும். அபிஜித், பிரம்ம முகூர்த்தங்களில் திருமணம் செய்வது சரியல்ல. அவை சிறப்பான நேரம் என்பதும், முகூர்த்த நாளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்பதும் தவறானது. அவசர, தவிர்க்க முடியாத, சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மட்டும் அந்த நேரங்களில் சுபகாரியங்கள் செய்யலாம்.