எண்கணிதம்
எண்கணிதம் என்பது கிரகங்கள், எண்கள், ஆங்கில எழுத்துக்கள் சம்பந்தப்பட்ட ஒரு தத்துவம். எண்கணிதத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு எண் உண்டு. அந்த எண்களுக்கு எழுத்துக்கள் உள்ளன. ஜோதிடப்படி இயற்கையிலேயே நல்ல கிரங்களான குரு, சுக்கிரன், புதன் ஆகியவைகளின் எண்கள் முறையே 3, 6, 5 ஆகியவை நல்ல எண்கள். சூ¡¢யன் தலைமை கிரகம் ஆதலால் 1 ஆம் எண் தலைமைத்துவமும் சில கெடுதல்களும் உடையது. சந்திரன் வளர்ந்து தேயக்கூடியது ஆகையால் 2 ஆம் எண். ஏற்றம் இறக்கம் கொண்டது. கெட்ட கிரகங்களான சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவற்றின் எண்களான 8, 4, 7, 9 ஆகியவை பொதுவாக நல்ல எண்கள் அல்ல. ஆக நல்ல எண்களில் பெயரை அமைத்துக் கொள்வதும் அந்த தேதிகளில் எதையும் செய்வதும் முன்னேற்றம் தரும்.
உடல் எண் அல்லது பிறவி எண் என்பது ஒருவரது பிறந்த தேதியில் உள்ள எண்களை மட்டும் கூட்டி வருவது. உயிர் எண் அல்லது விதி எண் என்பது அவரது பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றில் உள்ள எண்கள் அனைத்தையும் கூட்டி வருவது. பெயர் எண் என்பது பெயா¢ல் உள்ள எழுத்துக்களுக்கான எண்களை கூட்டி வருவது.
GANESAN என்பவரது பிறந்த தேதி 24.10.2013.
தேதியின் கூடுதல் 2 + 4 = 6 என்பது அவரது உடல் எண்.
2 + 4 + 1 + 0 + 2 + 0 + 1 + 3 = 13 அதை மீண்டும் கூட்டனால் 1 + 3 = 4 என்பது அவரது உயிர் எண்.
GANESAN இதில் உள்ள எழுத்துக்களின் எண்களை கூட்டினால் 3 + 1 + 5 + 5 + 3 + 1 + 5 = 23 அதை மீண்டும் கூட்ட 2 + 3 = 5 என வரும். இதுவே அவரது பெயர் எண்.
6 என்பது சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள எண், 4 என்பது ராகுவின் எண். சிலருக்கு அவரது உடல் எண், உயிர் எண்ணே பெயர் வைக்க யோகமான எண்ணாக அமையும். சிலருக்கு வேறு கிரகங்களின் எண்கள் யோகமாக அமையும். ஆகையால் வேறுவேறு உடல் எண்ணிலும் உயிர் எண்ணிலும் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க யோகமான எண்கள், கெடுதலான ஆகாத எண்கள் தரப்பட்டுள்ளது.
bgaஈ it¡f nahfkhd v©: ஒருவரது பிறந்த தேதியை கூட்டி உடல் எண்ணும், எல்லாவற்றையும் சேர்த்து கூட்டி உயிர் எண்ணும் பார்த்து அவைகளுக்கு யோகமான பெயர் எண்கள் எவை என அட்டவணையில் பார்க்க வேண்டும்.
பிறந்த தேதி 23.06.2013
உடல் எண்: 2 + 3 = 5. இது புதனின் எண்.
உயிர் என்: 2 + 3 + 0 + 6 + 2+ 0 + 1 + 3 = 17 = 1 + 7 = 8
இது சனியின் எண். ஆகவே இவர் புதன் மற்றும் சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர். இவருக்கு பெயர் எழுத்துக்களின் கூடுதல் புதனின் எண்ணான 5 ல் வரும்படி பெயர் வைக்கலாம். சனியின் எண்ணான 8 ல் பெயர் வைப்பது நல்லதல்ல. சுக்கிரனின் எண்ணான 6 லும் பெயர் வைக்கலாம். 5 எனும் போது கூட்டினால் 5 வரக்கூடிய 14, 23, 32, 41, 50, 59, 77 என்ற எண்கள் வரும்படி பெயர் வைக்கலாம். அல்லது கூட்டுத்தொகை 6 வரக்கூடிய 15, 24, 33, 42, 51, 60, 69 என்ற எண்கள் வரும்படியும் பெயர் வைக்கலாம்.
fhஈ, thfd§f௲ th§f:
கார், வாகனங்கள் வாங்கும் போது வாகன எண்ணுடன் அதன் எழுத்துக்களின் எண்களையும் சேர்த்து கூட்ட வேண்டும்.
JLW 5657 = 1 + 3 + 6 + 5 + 6 + 5 + 7 = 33 = 3 + 3 = 6
ரூL, fil, mYtyfஅ
வீடு வாங்கும்போது தெரு எண் முக்கியமல்ல. வா¢சையான வீடுகலாயின் வீட்டின் எண் மட்டும் போதும்.
LORONG 12, DOOR NO: 23, வீட்டின் எண் மட்டும் 2 + 3 = 5
அடுக்கு மாடி வீடாக இருந்தால் கட்டிடத்தின் (BLOCK) எண் முக்கியமல்ல. மாடியின் எண்ணும் (FLOOR) கதவு எண்ணும் (DOOR NO, UNIT NO) சேர்த்து கூட்ட வேண்டும். ஏனெனில் சில இடங்களில் நம் வீட்டின் கதவு எண்ணும் மேல் மாடி, கீழ் மாடி வீடுகளின் கதவு எண்ணும் ஒன்றாகவே இருக்கும். ஆனால் மாடி எண் மாறுவதால் கூட்டு எண் மாறும்.
Blk 24 #12-29, அதாவது 12 வது மாடி, 29 ஆம் எண் வீடு. 1 + 2 + 2 + 9 = 14 = 1+ 4 = 5.