பஞ்சாங்க அடிப்படைகள்
பஞ்சாங்கம்
கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை சுத்தம் என்றும் கிருஷ்ண பட்சத்தை பகுளம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
வாக்கியம், திருக்கணிதம்
கண்ணன் பஞ்சாங்கம் வாக்கியம், திருக்கணிதம் இரண்டு முறைகளிலும் கணிக்கப்பட்டு உள்ளது. திருக்கணிதப்படியான திதி, நடசத்திரம் முடியும் நேரங்கள், கிரகநிலைகளே துல்லியமானது நிரூபிக்கப்பட்டது ஆகும். இந்திய அரசின் சார்பிலும் ஸ்ரீகாஞ்சி சங்கரமட சார்பிலும் திருக்கணித பஞ்சாங்கங்களே வெளியிடப்படுகிறது. இந்துக்கள் வாழும் உலக நாடுகள் அனைத்திலும் திருக்கணிதமே பின்பற்றப்படுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் இடையில் வந்த ஒரு கணித முறை. அது துல்லியமானது அல்ல. அதனால் மனிதர்களுக்கான ஜாதகம் கணித்தல், பலன் சொல்லுதல், திருமணம், கிரக பிரவேசம் போன்ற சுபகா¡¢யங்கள், வருட சிரார்த்தங்கள் மற்றும் ஆலய விரதங்கள், விஷேசங் களையும் திருக்கணிதப்படி அனுசரிப்பதே சா¢யானது.
சௌரமானம்: இது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்டது. சூரியன் வான் வெளியில் உள்ள ராசி மண்டலத்தில் சுற்றி வரும் கால அளவை பொறுத்து கணக்கிடப்படுகிறது. மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கிற நாளிலிருந்து அடுத்த ராசியான ரிஷப ராசிக்கு மாறுகிற வரையிலான காலகட்டம் ஒரு மாதம் (சித்திரை) என்று கணக்கிடப்படுகிறது. ரிஷப ராசியில் பிரவேசிக்கும் நாள் முதல் அடுத்த (வைகாசி) மாதமாகும். அந்த மாதத்தின் நாட்கள் அந்த ராசியின் பிரமாணத்தைப் பொறுத்து வித்தியாசப்படும். சில மாதங்கள் இருபத்தொன்பது நாட்களும் சில மாதங்கள் முப்பத்தி இரண்டு நாட்கள் வரை இருக்கும். அந்த வகையில் ஒரு வருடம் என்பது பனிரெண்டு மாதங்களையும் முன்னூற்றி அறுபத்தைந்து நாட்கள் 15 நாழிகை 31 வினாடி 15 தர்பரைகளையும் கொண்டதாக கணக்கிடப்படுகிறது. இதுவே இப்போது நடைமுறையிலுள்ள வருட மாத கணக்காகும்.
சாந்திரமானம்: இது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. அமாவாசை முடிந்து அடுத்த நாளான சுக்லபக்ஷ பிரதமை முதல் கிருஷ்ணபக்ஷ அமாவாசை முடிய உள்ள மாதம் ஒரு சாந்த்ரமான மாதம் ஆகும். சுக்லபக்ஷம் பதினைந்து நாட்களும் கிருஷ்ணபக்ஷம் பதினைந்து நாட்களும் ஆக கூடுதல் முப்பது நாட்கள் (சுமார் இருபத்து ஒன்பதரை நாட்கள்) கொண்டது ஒரு சாந்திரமான மாதம் ஆகும். பனிரெண்டு சாந்திரமான மாதங்களை கொண்டது ஒரு வருடம். அது சுமார் முன்னூற்று ஐம்பத்து நான்கு நாட்கள் மட்டுமே. சௌரமான வருட பிறப்பிற்கு முன் வருகிற பங்குனி மாத சுக்ல பட்ஷ பிரதமை முதல் அடுத்த சௌரமான வருட பிறப்பிறகு முன் வருகிற பங்குனி மாத அமாவாசை முடிய உள்ள காலம் ஒரு சாந்திரமான வருடம். மூன்று சௌரமான வருடங்களில் 36 சாந்திரமான மாதங்களுக்கு பதிலாக 37 சாந்திரமான மாதங்கள் நிகழும். ஆதலால் செளரமான – சாந்திரமான வருடங்கள் சமமாக இணங்கி வரும் வகையில் ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை வரும்போது இடையில் வரும் சாந்திரமான மாதம் அதிக சாந்திரமான மாதம் என அழைக்கப்படும். இதுவே பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட வருட மாத கணித முறையாகும். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளாவில் சௌரமான முறையும் தெலுங்கு, கன்னடத்தில் சாந்திரமான வருட முறையும் கடைபிடிக்கப்படுகிறது. அந்ததந்த சாந்திரமான மாதத்தின் பௌர்ணமியன்று சம்பந்தப்படுகிற நட்சத்திரத்தின் பெயரை அனுசரித்தே அந்த மாதத்தின் பெயர் அமையும். உதாரணமாக சைத்ர மாதத்தில் பௌர்ணமியுடன் சித்திரை நட்சத்திர சம்பந்தம் வரும் என்பதால் அம்மாதம் சைத்ர மாதம் என்று அழைக்கப்படுகிறது. திருக்கணித, வாக்ய பஞ்சாங்கங்கள் சௌரமானப்படி சித்திரை முதல் பங்குனி வரை தயார் செய்யப்பட்டாலும், அதில் குறிப்பிடப்படும் பண்டிகைகள், விரதங்கள், கல்பாதி, யுகாதி, ஜெயந்திகள் போன்றவை பெரும்பாலும் சாந்திரமானப்படி அனுஷ்டிக்கப்படுவதாலும், சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்தவும் வசதியாக சாந்திரமான மாதங்கள் பஞ்சாங்கத்தில் காட்டப்படுகின்றன. ஒவ்வொரு அமாவாசை தினத்திற்கு அடுத்த பிரதமையில் சாந்திரமான மாத ஆரம்பம் குறிப்பிடப்படுகிறது. சுக்லபட்சத்தை சுத்தம் என்றும் கிருஷ்ண பட்சத்தை பகுளம் என்றும் குறிப்பிடப்படுகிறது.