வாஸ்து-மனையடி சாஸ்திரம்
வாஸ்து என்பது நாம் வாழும் இடம் பற்றிய தத்துவம். புதிதாக வீடு கட்டும் போது தான் வாஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியும். வீடு, அலுவலகம், வியாபார ஸ்தலம், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகளை கண்டுபிடித்து அறைகளை, பொருட்களை சற்று மாற்றியும் சில பா¢காரங்களை செய்தும் கொள்ளலாம். பிறரால் கட்டப்பட்டு விற்கப்படுகிற வீடுகளை வாங்குவதற்கு முன்பே வாஸ்து நிபுணரை அழைத்து சென்றால் எந்த வriசையில், எந்த தலை வாசலுடன் எப்படிப்பட்ட அமைப்புள்ள வீட்டை வாங்கினால் நல்லது என பார்த்து வாங்கலாம். மறுசீரமைப்பின் போதே சில மாற்றங்களையும் செய்து கொள்ளலாம்.
திசைகள்: கிழக்கு – இந்திரன் – East, தென்கிழக்கு – அக்னி மூலை – SouthEast, தெற்கு – யமன் – South, தென்மேற்கு – நிருதி – SouthWest, மேற்கு – வருணன் – West, வடமேற்கு – வாயு NorthWest, வடக்கு – குபேரன் – North, வடகிழக்கு – ஈசானிய மூலை – NorthEast.
பூஜை அறை வீட்டின் ஈசானியமே (வடகிழக்கு) பூஜை அறைக்கு சிறந்தது. வடக்கு, வடமேற்கும் உகந்ததே. பிரம்ம பாகம் (மத்தி), நல்லதல்ல. அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவரை ஒட்டி நமது இடுப்பிற்கு மேலான உயரத்தில் பாரமில்லாத மேடை அமைத்து அதில் சுவாமி படங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்க வேண்டும். கனமான மரத்தால் செய்த தேர் போன்ற அலங்கார பூஜை மாடங்களை தரையில் வைத்து வணங்குவது நல்லதல்ல. வணங்கும் பட்சத்தில் நின்று வணங்காமல் கட்டாயம் அமர்ந்து வணங்க வேண்டும். வடக்கு அல்லது கிழக்கு நோக்கி பூஜை செய்ய வேண்டும். தீபம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி எரிய வேண்டும். தனி அறை இல்லாத போது படுக்கையறை தவிர்த்து மற்ற இடங்களில், எந்நேரமும் திறந்தபடி இல்லாமல், சாமி கும்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் திரை போட்டு மூடும்படி அமைக்கலாம்.
அமைதியான தெய்வ படங்களை மட்டுமே வீட்டில் வைத்து கும்பிட வேண்டும். ஆங்கார ரூபங்கள் நல்லதல்ல. கண்டிப்பாக கருங்கல் விக்கிரகங்கள் வீட்டில் வைக்க கூடாது. தினசரி காலையில் குளித்து, புதிதாக சுத்தமாக சமைத்து, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம் செய்ய முடியாவிட்டால் ஐம்பொன் சிலைகளையும் வீட்டில் வைக்க கூடாது. தினம் பூவை கூட மாற்ற முடியாதவர்கள் சுவாமி படங்களை வாங்கி வீட்டில் குவித்து, சும்மா போட்டு வைக்க கூடாது. வாஸ்து புருஷர் ஒரு அசுரர். வழிபடும் தெய்வமல்ல. அவரை அழகாக்கி வரையப்பட்ட படத்தையோ யந்திரத்தையோ வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது.
பணப்பெட்டி: பணம், நகை வைக்கும் கனமான பெட்டிகள், பீரோ, அலமா¡¢ ஆகியவை தென்மேற்கு அறையில் தென்மேற்கு மூலையில் மேற்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும். கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். தெற்கு சுவரை ஒட்டி வடக்கும் நோக்கியும் வைக்கலாம். தெற்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ வைக்கக் கூடாது. கிழக்கு, தென்கிழக்கு அறைகள் மிக பாதகமானவை.
சமயலறை: வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் (அக்னி – வெப்பம்) சமையலறை அமைப்பதே சிறப்பு. அறையின் தென்கிழக்கு மூலையில் அடுப்பு அமைய வேண்டும். கிழக்கு நோக்கி நின்று சமைக்க வேண்டும். முடியாத சூழலில் மற்ற பாகங்களில் அமைத்தால் சமையல் அறையில் அடுப்பு தென்கிழக்கு பாகத்தில் வர வேண்டும். பாத்திரங்கள் கழுவும் தண்ணீர் புழக்கம் வடகிழக்கு பகுதியில் அமைய வேண்டும். மாறி இருக்க கூடாது. சமையலறையை ஒட்டியோ நேரே மேல் மாடியிலோ கீழ்மாடியிலோ கழிவறை இருக்க கூடாது.
சாப்பாட்டு அறை: சாப்பாட்டு அறை (டைனிங்க் ரூம்) சமையலறைக்கு அடுத்து தெற்கு பாகத்தில் அமைவது நல்லது. வீட்டின் மையத்தில் இருப்பது நல்லதல்ல. வெளியிலிருந்து பார்க்கும்படி அமையக் கூடாது. வடக்கு, கிழக்கு நோக்கி அமர்ந்து உண்ண வேண்டும். விருந்தாளிகள் மேற்கு, தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடலாம்.
படுக்கை அறை: படுக்கை அறைகள் மேற்கு சுவரை ஒட்டி அமைவது சிறப்பு. தென்மேற்கு, தெற்கு, மேற்கு பாகமும் நல்லது. வடமேற்கு பாக அறை குழந்தைகள், இளம் பெண்கள், விருந்தினர்களுக்கும் வடக்கு பாக அறை குழந்தைகள், வயதானவர்களுக்கும் வடகிழக்கு பாக அறை நோயாளிகளுக்கும் நல்லது, தென்கிழக்கு பாகத்தில் படுக்கை அறை அமைப்பதோ தலை வைத்து படுப்பதோ யாருக்குமே நல்லதல்ல. தம்பதியர் படுக்கை அறையில் தெற்கில் தலை வைத்து வடக்கில் கால் நீட்டி தூங்கலாம். மேற்கு திசையில் தலை வைத்து கிழக்கில் கால் நீட்டியும் படுக்கலாம், குழந்தைகள், வயதானவர்கள் கிழக்கில் தலை வைத்து மேற்கே கால் நீட்டி தூங்கலாம். வடக்கில் யாருமே தலை வைத்து படுக்க கூடாது. எந்த அறையாக இருந்தாலும் தென்கிழக்கு அக்னி மூலையில் (கிழக்கு – தெற்கு சுவர்கள் சேரும் பாகம்) கட்டில், படுக்கை போடுவதோ, யாரும் தலை வைத்து படுப்பதோ கூடாது. படுக்கை அறை நீர்நிலைகளை பார்க்கும்படி இருக்கக் கூடாது. அறையினுள் நீர்நிலைகளான கடல், குளம், ஆறு, நீர்வீழ்ச்சி போன்ற படங்கள், மீன்தொட்டி வேண்டாம்.
படிக்கும் அறை: மாணவர்கள் படிக்கும் அறை வடக்கில் அல்லது மேற்கில் அமைவது நல்லது. படிப்பவர் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது. உள்ளே பொ¢ய கண்ணாடி, மீன்தொட்டி வைக்க கூடாது.
குளியல், கழிவறை: வடமேற்கு, மேற்கு, தென்மேற்கு பாகங்களில் அமைப்பது நல்லது. குளிக்கும்போது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி குளிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு நோக்கி உட்காந்து மலம் கழிக்க வேண்டும். வீடு முச்சந்தியிலோ தெருகுத்து ஆகவோ அமைய கூடாது. வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் போன்ற உயிரினங்களை அவற்றின் சுதந்திரத்தை பறித்து நம் சந்தோஷத்திற்காக வீட்டில் அடைத்து வளர்க்கக் கூடாது.
புதுமனை புகுதல், கிரபிரவேசம்: ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களிலும் செவ்வாய், சனிக்கிழமைகளிலும் வீடு குடிபுகுதல் கூடாது. குரு, சுக்கிர அஸ்தன காலங்கள் கூடாது. அவரவர் ராசிக்கு சந்திராஷ்டம நாட்கள் கூடாது. மனைவி கர்ப்பமாய் இருக்கும் பொழுதும், திருமணம் செய்த வருடத்திலும், துக்க காரியங்கள் செய்த வருடத்திலும் கிரக ஆரம்பம், கிரக பிரவேசம் செய்யக் கூடாது. வீடு மட்டுமல்லாது கடை, அலுவலகம், தொழிற்சாலைகள் போன்ற புதிதாக தொடங்கும் அனைத்திற்கும் பொருந்தும்.
புதிதாக வீடு, கட்டடம் கட்ட, வாஸ்து பூஜை நாட்களும் நேரமும்: வாஸ்து பகவான் சாப்பிடும் நேரமும் தாம்பூலம் போடும் நேரமுமான கடைசி 18+18=36 நிமிடங்கள் தான் அவரை பூஜை செய்ய உகந்த நேரமாகும். கோலாலம்பூர் சூரிய உதயப்படி அந்தந்த தேதிக்கு துல்லியமாக கணக்கிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மணி நிமிடங்களை சரியாக கணக்கிட அந்தந்த ஊர்களின் சூரிய உதயத்தை அவசியம் கணக்கில் கொள்ள வேண்டும். உதாரணமாக சித்திரை மாதம் 10ம் தேதி கோலாலம்பூர் சூரிய உதயம் 7.09 நிமிடமாகும். ஊர் பினாங்கு எனில் சூரிய உதய வித்தியாச அட்டவணையில் ஏப்ரல் மாதம் பினாங்கு வித்தியாசம் (+4). எனவே கீழே குறிப்பிட்ட அட்டவணையில் 10.03 am – 10.39 am என்கிற மனியுடன் 4 நிமிடங்கள் கூட்டிக் கொள்ள வேண்டும் அதாவது அன்று பினாங்கில் வாஸ்து மனைகோலும் நேரம் 10.07 am முதல் – 10.43 am வரை ஆகும். வாஸ்து பூஜை நாட்களும் நேரமும் தமிழ் மாத தேதிப்படி எல்லா வருடமும் நிரந்தரமானவை. மாறாது.
தமிழ் தேதி மணி
சித்திரை 10 – 10.03 am – 10.39 am
வைகாசி 21 – 11.12 am – 11.48 am
ஆடி 11 – 08.57 am – 09.33 am
ஆவணி 06 – 04.31 pm – 05.07 pm
ஐப்பசி 11 – 08.42 am – 09.18 am
கார்த்திகை 08 – 11.58 am – 12.34 pm
தை 12 – 11.36 am – 12.12 pm
மாசி 22 – 11.32 am – 12.08 pm