|

பஞ்சாங்க விஷயங்கள்

மலமாதம்: ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பௌர்ணமி வந்தால் அந்த மாதம் மலமாதம் என்று அழைக்கப்படுகிறது. மல மாதங்களில் சுபகாரியங்களை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் வஸந்த ருதுவான சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் இரண்டு அமாவாசையோ இரண்டு பௌர்ணமியோ வந்தால் அம்மாதங்களுக்கு மலமாத தோஷம் கிடையாது.

திரிதினஸ்ருக்: ஒரு திதியோ, நட்சத்திரமோ, யோகமோ மூன்று நாட்களில் சம்பந்தப் பட்டு இருப்பது திரிதின ஸ்புருக். ஒரே நாளில் மூன்று திதிகள், நட்சத்திரங்கள், அல்லது யோகங்கள் சேர்ந்திருப்பது அவமாகம். இப்போது திதியை மட்டும் கணக்கி எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நாட்களில் சுப காரியங்கள் செய்வது நல்லதல்ல. இந்த நாட்களிலும் சுபமுகூர்த்த தேதிகள் கொடுக்கப்பட்டு உள்ளது. முறையாக செய்ய விரும்புபவர்கள் அந்த தேதிகளை தவிர்க்கவும்.

திதித்வயம், சூன்ய திதி, அதிதி: இரண்டு சிரார்த்த திதிகள் ஒரே நாளில் அமைவது திதித்வயம். அன்று இரு திதிக்காரர்களுக்கும் சிரார்த்தம். சூன்ய திதி என்பது சௌரமான திதி நிர்ணய விதிகளின்படி சிரார்த்தத்திற்கு விலக்கப்பட்ட திதிகள். இவைகளில் யாருக்கும் சிரார்த்தம் செய்யக்கூடாது. அதிதி என்பது சிரார்த்தத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது போக அதிகமாக உள்ள திதி ஆகும். இதிலும் சிரார்த்தம் இல்லை.

கும்பாபிஷேகம்: உத்தராயணத்தில் தை, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களும் அதில் சுக்லபட்சமும் ஏற்றவை. ரோகிணி, மிருகசீ¡¢ஷம், புணர்பூசம், உத்திரம், அஸ்தம், சுவாதி, ரேவதி நட்சத்திரங்கள் உத்தமம். மூலம், அவிட்டம் மத்திமம். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி திதிகள் கூடாது. ¡¢ஷபம், சிம்மம், விருட்சிகம், கும்பம் லக்னங்கள் உத்தமம். சந்திரன் குரு சுக்கிரன் பலமுடனும் அஸ்தமன, அஸ்தங்கமில்லா காலமும் அவர்கள் அதிபதிகளாயிருக்கும் லக்னமும் உத்தமம். சுபர்கள் கேந்திர, தி¡¢கோணங்களிலும் பாபர்கள் 3, 6லும் இருக்க உத்தமம். சந்திரன் 6ல் இல்லாமலும் 8ஆம் இடம் சுத்தமும் உள்ள லக்னங்கள் உத்தமம். ஸ்தி¡£ தேவதைகளுக்கு சர, உபய லக்னங்களும் புருஷ தேவதைகளுக்கு சர லக்னங்களும் உத்தமம். கத்தா¢ யோக லக்னங்கள் கூடாது. நேத்திரம் (கண்) 2ம், ஜீவன் (உயிர்) 1 இருப்பது உத்தமம். ஒன்று-அரை மத்திமம். நேத்திரமும் ஜீவனுமில்லாத நாட்கள் (0-0) கூடாது.

பஞ்சகம்: ஞாயிறு முதல் அன்றைய கிழமை வரையிலும், பிரதமை முதல் அன்றைய திதி வரையிலும், அசுவினி முதல் அன்றைய நட்சத்திரம் வரையிலும், மேஷம் முதல் தேவைப்பட்ட லக்னம் வரையிலும், எண்ணி வந்த தொகைகளுடன் லக்ன துருவ எண்ணிக்கையையும் ஒன்றாய்க் கூட்டி ஒன்பதால் வகுத்த மிச்சம் 3,5,7,9 ஆகில் உத்தமம். 1,2,4,6,8 ஆகில் ஆகாது. ஒன்று வந்தால் ம்ருத்யு பஞ்சகம் 2. அக்னி பஞ்சகம், 4. ராஜ பஞ்சகம், 6. சோர பஞ்சகம், 8. ரோக பஞ்சகம், இவை அசுப பஞ்சகங்கள். திருமணத்திற்கு ம்ருத்யு பஞ்சகமும், உபநயனத்திற்கு ரோக பஞ்சகமும், கிரகாரம்பம், கிரக பிரவேசங்களுக்கு அக்னி பஞ்சகமும், யாத்திரைக்கு சோர, ரோக பஞ்சகமும், அரசு வேலைகளுக்கு ராஜ பஞ்சகமும், அவசியம் நீக்கப்படுதல் வேண்டும். மற்ற கர்மாக்களுக்கு பகற்காலத்தில் அக்னி, ராஜ பஞ்சகமும், இரவு காலத்தில் சோர, ரோக பஞ்சகமும், எப்போதும் ம்ருத்யு பஞ்சகமும் நீக்கப்பட வேண்டும். அக்னி சோர, ரோக பஞ்சகங்களில் திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபுகுதல் கூடாது. மிருத்யு பஞ்சங்கத்தில் பங்குத் தொழில் லிமிடெட் கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கூடாது. அக்னி பஞ்சகத்தில் பஞ்சு, பெட்ரோல், பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக் கூடாது. இராஜ பஞ்சகத்தில் அரசு வங்கி மற்றும் பொதுநிதி நிறுவனங்கள், கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது. நிஷ் பஞ்சகங்கள் மிக்க சுபம்.புதன் கிழமைகளில் ம்ருத்யு பஞ்சகமும், சனியில் சோர பஞ்சகமும், வியாழன், வெள்ளியில் ராஜ பஞ்சகமும், செவ்வாயில் அக்னி பஞ்சகமும் ஞாயிறில் ரோக பஞ்சகமும் ஆகாது. மற்ற கிழமைகளில் கீழ்கண்ட பரிகாரம் செய்து கொள்ளலாம். 1. ம்ருத்யு பஞ்சகம் – ரத்னம் 2. அக்னி பஞ்சகம் – சந்தனம் 4. ராஜ பஞ்சகம் – எலுமிச்சம் பழம் 6. சோர பஞ்சகம் – தீபம். 8. ரோக பஞ்சகம் – தான்ய தானம். மற்ற பஞ்சகங்கள் அனைத்தும் சுபம். பஞ்சகம் பார்க்கும் பொழுது வாரத் துருவ எண்ணிக்கையையும் சேர்த்து பஞ்சகம் பார்க்க வேண்டும் என்பர் சிலர். வார துருவம்: ஞாயிறு-15, திங்கள்-10, செவ்வாய்-12, புதன்-3, வியாழன்-8, வெள்ளி-8, சனி-3. லக்ன துருவம்: மேஷம்-5, ¡¢ஷபம்-7, மகரம்-2, கும்பம்-4, மீனம்-6. மற்றவைகளுக்கு துருவமில்லை.

முதல் தர சுப திதிகள்: திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி இவை முதல்தர சுபதிதிகள். துவிதியை, பௌர்ணமி இரண்டாம் தர திதிகள். அவசர, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நவமியில் இரவில் மட்டும் சுபகா¡¢யங்கள் செய்யலாம். அஷ்டமியில் அதிகாலையில் மட்டும் கிருஷ்ணருக்கு வழிபாடு செய்து விட்டு சுபகா¡¢யங்கள் செய்யலாம். பிரதமையில் திருமாலையும், சதுர்த்தியில் விநாயகரையும், சதுர்த்தசியில் சிவனையும், அமாவாசையில் முன்னோர்களையும் வழிபட்டு விட்டு, பிறகு சுபகா¡¢யங்கள் செய்யலாம். அஷ்டமியில் அதிகாலைக்கு பிறகும் நவமியில் பகலிலும் சுபகா¡¢யங்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது.

நல்ல நேரம் பார்க்க: சந்திர பலம், தாராபலம் உள்ள நாட்கள் நல்லது. ராசிப்படி சந்திராஷ்டம நாட்களும் செவ்வாய், சனிக்கிழமைகளும் கா¢நாளும் திதிகளில் அஷ்டமி, நவமியும், காலங்களில் இராகுகாலம், எமகண்டமும், யோகத்தில் மரணயோகமும் ஓரைகளில் சூ¡¢யன், செவ்வாய், சனி ஓரைகளும், கெளா¢ பஞ்சாங்கப்படி ரோக, சோர, விஷ காலங்களும், பஞ்சகங்களில் அக்கினி, சோர, ரோக, மிருத்யு பஞ்சங்களும் கூடாது.

தோஷமற்ற காலம்: இரவில் கிழமை தோஷமில்லை. சூ¡¢ய உதய காலத்தில் திதி தோஷமில்லை. நடுப்பகலில் நட்சத்திர தோஷமில்லை. அஷ்டமியிலும் செவ்வாய்க் கிழமையிலும் நடுப்பகலுக்கு மேல் தோஷம் இல்லை. நவமியில் இரவில் தோஷமில்லை. மரண யோகம் ஆரம்பித்து 9 நாழிகைக்கு மேல் தோஷமில்லை. முகூர்த்த நேர லக்னத்தில் சுக்கிரனோ, குருவோ இருந்தால் மற்ற தோஷங்கள் இல்லை.

இறப்பு வீட்டில் தோஷ காலம்:ஒருவருடைய தந்தை இறந்துவிட்டால் ஒரு வருடமும், தாய் இறந்து விட்டால் 6 மாதமும் மனைவி சகோதரங்கள், பிள்ளைகள், பங்காளிகள் இறந்துவிட்டால் 3 மாதமும் திருமணம் போன்ற சுபகா¡¢யங்கள், வீடு கட்ட ஆரம்பித்தல், குடிபுகுதல் போன்றவை செய்யக் கூடாது. தவிர்க்க முடியாவிட்டால் விக்னவிநாயகரை பூஜித்து அபிஷேக ஆராதனைகள் செய்துவிட்டு அனைத்து சுபகா¡¢யங்களும் செய்யலாம். வசதி உள்ளவர்கள் கணபதி ஹோமம் செய்து, ஏழைகள், ஆதரவற்ற அனாதைகள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகளுக்கு அன்னதானம் செய்துவிட்டு சுபகா¡¢யங்கள் செய்யலாம்.

தனிஷ்டா பஞ்சமி, இறப்பு நக்ஷ்த்திர தோஷம், பரிகாரம்: கீழ்கண்ட நட்சத்திரங்களில் ஒருவர் இறந்துவிட்டால் கீழ் குறிப்பிட்ட மாதம் வரை உயிர் நீங்கிய வீட்டில் அல்லது இறந்தவர் வீட்டில் ஒரு வெண்கல பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு சூ¡¢யன் மறையும் வேலையில் தீபம் ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பிப்பது நல்லது. அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சதிரங்களுக்கு 3 மாதம், ரோகிணிக்கு 3 மாதம், கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், மிருகசீரிஷம், சித்திரை, விசாகம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு 2 மாதம். மற்ற நட்சத்திரங்களில் மரணம் என்றால் செய்ய தேவை இல்லை.

நேத்ரம்,ஜீவன்: ஆலய நிர்மான துவக்கம், தேவதா பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், திருப்பணிகள், புதிதாக துவங்குகிற வேலைகள், கிரகப்பிரவேசம், மரங்கள் நடுதல், தொழில் வியாபார ஸ்தலங்கள் ஆரம்பித்தல் ஆகியவைகளுக்கு நேத்திரம் (கண்) ஜீவன் (உயிர்) என்பவை முக்கியமானதாகும்.நேத்திரம் இரண்டு ஜீவன் ஒன்று வரக்கூடிய நாட்கள் மிகவும் நல்ல நாட்கள். ஒன்று அரை இருப்பது மத்திமம். இரண்டும் பூஜ்ஜியமாக அதாவது நேத்திரமும் இல்லாமல் ஜீவனும் இல்லாமல் உள்ள நாட்கள் அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஜேஷ்டா நிவர்த்தி: ஜேஷ்ட குமாரனுக்கும், ஜேஷ்ட குமாரத்திக்கும் ஜேஷ்ட மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது. அதாவது மணமகன் குடும்பத்தில் மூத்த பையனாகவும் மணமகள் குடும்பத்தில் மூத்த பெண்ணாகவும் இருந்தால் அவர்களுக்கு சாந்திரமான ஜேஷ்ட மாதத்தில் மட்டும் திருமணம் செய்யக்கூடாது. மற்ற மாதங்களில் திருமணம் செய்யலாம். (ஜேஷ்ட மாதம் என்பது தமிழ் வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு ஆனி மாத அமாவாசை வரை). எந்த மாதமாக இருந்தாலும் அவர்கள் பிறந்த நட்சத்திரத்திலோ, கிழமையிலோ திருமணம் செய்வதும் நல்லதல்ல.

அக்னி நக்ஷ்த்திரம்: வருடாவருடம் சித்திரை 21 ஆம் தேதி முதல் வைகாசி 14 தேதி வரை (சூ¡¢யன் பரணி 3 ஆம் பாதம் முதல் ரோகிணி 1 ஆம் பாதம் முடிய சஞ்சா¢க்கும் காலம்) சுமார் இருத்தி நாலேகால் நாள் அக்னி நட்சத்திரம். இதில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூ¡¢யன் சஞ்சா¢க்கும் சுமார் 15 நாட்கள் அதிக வெயில் காலமான கத்தா¢ வெயில் காலம் எனப்படும்.

அக்னி நக்ஷ்த்திரத்தில் செய்யக் கூடியவை: திருமணம், கிரக பிரவேசம், ருது சாந்தி, உபநயனம், ஹோமம் போன்ற கா¡¢யங்கள் செய்யத் தகுந்தவை. brக்ஷ்a¡ Tlhjit: கிரக ஆரம்பம், நிலம், வீடு வகைகள் வாங்குவது, தோட்டம் அமைத்தல், விதை விதைத்தல், செடிகள் வெட்டுவது, நார் உரிப்பது, கிணறு, குளம் வெட்டுதல், புதிய கிராமம் அமைத்தல், தீ¨க்ஷ எடுத்தல், வாகனம் ஏறுதல் போன்ற காரியங்கள் விலக்கத் தக்கவை. மலேசியாவில் அக்னி நட்சத்திர தோஷம் பார்க்க தேவை இல்லை.

அக்னி நக்ஷ்த்திரத்தில் செய்யக் கூடாதவை:

குல தெய்வ வழிபாடு: நமது தந்தை வழி முன்னோர்களான பாட்டன், முப்பாட்டனார்கள் வழிவழியாக வணங்கி வந்த தெய்வங்களே குலதெய்வம் எனப்படும். குடும்பத்தில் திருமணம், கிரகபிரவேசம், தொழில் ஆரம்பம் போன்ற எந்த விஷயம் செய்தாலும், பிரசித்தி பெற்ற கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்ய வேண்டும். குலதெய்வ கோவில் இந்தியாவில் இருந்தால் அங்கு செல்ல வேண்டிய கட்டாயமில்லை. சென்று வருவது சிறப்பு. அங்கு செல்ல முடியாதவர்கள், குலதெய்வம் தொ¢யாதவர்கள், இங்கேயே ஆடி, அல்லது தை மாத வெள்ளிக்கிழமையில் குலதெய்வ பூஜை செய்யலாம். ஒரு புது புடவையோ வேஷ்டியோ வாங்கி அதை நீலவாக்கில் முறுக்கி குறுக்காக மடித்து (Ω போல) சுவாமி போல செய்து வைத்து அதற்கு மஞ்சள், குங்குமமிட்டு, பூச்சரங்கள் சூட்டி, சீர்வா¢சை பொருட்கள், பிரசாதங்கள் வைத்து, வீட்டில் பொ¢யோர்களை கேட்டு தங்கள் குல வழக்கப்படி பூஜை செய்து வணங்கலாம். அண்ணன், தம்பி, பங்காளிகள் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து கூட்டாக செய்வது சிறப்பு.

செவ்வாய் தோஷம்: லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் என்பது பொதுவிதி. ஆண்களுக்கு 2, 7, 8 ம் பெண்களுக்கு 4, 8, 12ம் மட்டுமே செவ்வாய் தோஷம் என்பது சிறப்பு விதி. செவ்வாய் அதன் ஆட்சி வீடுகளான மேஷம், விருச்சிகம், உச்சவீடான மகரம், நீச்சவீடான கடகம் இவைகளில் இருந்தால் தோஷமில்லை. குருவுடன் சேர்ந்து இருந்தாலும் குருவினால் பார்க்கப்பட்டாலும் சூ¡¢யனுடன் சேர்ந்து அஸ்தங்கம் ஆகிவிட்டாலும் செவ்வாய் தோஷமில்லை. கடக, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் பாதிப்பதில்லை. மிதுனம், கன்னி ஆகியன இரண்டாமிடமாகி அதில் செவ்வாய் இருந்தால் 2ஆம் இட தோஷமில்லை. ¡¢ஷபம், துலாம் 12ஆம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தால் 12 ஆமிட தோஷமில்லை. மேஷம், விருச்சிகம் 4ஆம் இடமாகி அதில் செவ்வாய் இருந்தால் 4ஆமிட தோஷமில்லை.

Similar Posts

  • |

    சிராத்த திதி

    சிரார்த்த திதி என்பது மறைந்த நமது முன்னோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்வதற்கான திதியாகும். இது திதி நிர்ணய விதிப்படி நிர்ணயிக்கப்படுவது. மறைந்த பெற்றோரின் சிரார்த்த திதியானது அவர்கள் இறந்த ஆங்கிலத் தேதிக்கு சம்பந்தப்பட்டதல்ல. நமது இந்து ஆகம முறைப்படி தமிழ் தேதிகளும் திதியும் சம்பந்தப்பட்டதாகும். சௌரமான மாதங்களின்படி தமிழ்நாடு, கேரளாவிலும் சாந்திரமான மாதங்களின்படி ஆந்திரா, கர்நாடகாவிலும் (தெலுங்கு, கன்னடர்கள்) கடைபிடிக்கப்படுகின்றன. எனவே அவரவர் குல வழக்கப்படி சிரார்த்தங்களை கடைபிடிக்க வேண்டியது. சௌரமானக்காரர்கள் அவர்கள் இறந்த…

  • பஞ்சாங்கங்களில் திருத்தம் அவசியம்

    பஞ்சாங்கங்களில் கிரக நிலைகள் மாறுபடக்கூடாது       நாம் வாழும் பூமியில் ஒரே ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் மட்டுமே உள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே சூரியன் இருக்க முடியும் ஆனால் இரண்டு இடங்களில் இருக்க முடியாது. சந்திரனும் மற்ற கிரகங்களும் அப்படித்தான். ஆனால் வெவ்வேறு பஞ்சாங்கங்களில் வெவ்வேறு இடங்களில் கிரக நிலைகள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். துல்லியத்தில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என்று கருதலாம். கணிதத்தில் துல்லியமான மாறுபாடு…

  • |

    பஞ்சாங்க அடிப்படைகள்

    பஞ்சாங்கம்கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை…

  • |

    வாஸ்து-மனையடி சாஸ்திரம்

    வாஸ்து என்பது நாம் வாழும் இடம் பற்றிய தத்துவம். புதிதாக வீடு கட்டும் போது தான் வாஸ்துவை முழுமையாக பின்பற்ற முடியும். வீடு, அலுவலகம், வியாபார ஸ்தலம், கட்டிடங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகளை கண்டுபிடித்து அறைகளை, பொருட்களை சற்று மாற்றியும் சில பா¢காரங்களை செய்தும் கொள்ளலாம். பிறரால் கட்டப்பட்டு விற்கப்படுகிற வீடுகளை வாங்குவதற்கு முன்பே வாஸ்து நிபுணரை அழைத்து சென்றால் எந்த வriசையில், எந்த தலை வாசலுடன் எப்படிப்பட்ட அமைப்புள்ள வீட்டை வாங்கினால் நல்லது என…

  • தகவல்கள்

    தைப்பொங்கல்: தமிழக உழவர்களின் திருநாளே தைப்பொங்கல். மகர சங்கராந்தி என்கிற தை மாதம் பிறக்கும் நேரத்திற்கும் தைப்பொங்கலிடும் நேரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஜய வருட மகர சங்கராந்தி நள்ளிரவு 1.06க்கு நடக்கிறது. மகர சங்கராந்தியானது மலேசிய நேரப்படி இரவு எட்டு மணியாக கூட இருக்கலாம். அதனால் தைமாதம் முதல் தேதி என்றைக்கு குறிப்பிடப்பட்டு உள்ளதோ அன்று காலையில் பொங்கலிட்டு (சூ¡¢ய உதயத்திற்கு மேல் – மதியத்திற்குள், நல்ல நேரத்தில்) சூ¡¢யனுக்கு படைத்து வழிபட வேண்டும். அதை விடுத்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *