|

பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம்: ஒரு நாள் 30 முகூர்த்தங்கள் கொண்டது. பகல் 15, இரவு 15 முகூர்த்தங்கள். ஒரு முகூர்த்தம் என்பது 2 நாழிகை அதாவது 48 நிமிடங்கள். 29 வது முகூர்த்தத்திற்கு பிரம்ம முகூர்த்தம் என பெயர். அது சூ¡¢ய உதயத்திற்கு 1 மணி 36 நிடங்களுக்கு முன் ஆரம்பித்து சூரிய உதயத்திற்கு 48 நிமிடம் முன்பாக முடியும். சூரிய உதயம் காலை 7.00 மணி எனில் பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 5.24 முதல் 6.12 வரையுள்ள நேரம். இது தினசரி சூரிய உதயத்துக்கு தக்கபடி மாறும். இது ஆண்டவனை வழிபட, தியானம், யோகாசனம் செய்ய, மாணவர்கள் படிக்க உகந்த நேரம். பகலில் எட்டாவது முகூர்த்தம் அபிஜித் முகூர்த்தம் என பெயர். பொதுவாக 12.36 pm முதல் 1.24 pm வரையுள்ள நேரம். பிரம்ம, அபிஜித் முகூர்த்தங்களில் ஆயிரம் தோஷங்கள், குற்றங்கள் விலகும் என சுலோகங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக தினமும் அந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் கிரக தோஷங்களின்றி சிறப்பாக வாழ்வார்கள் என அர்த்தமல்ல. திருமணம் போன்ற சுபகாரியங்கள் சுபமுகூர்த்த நாளிலும் சூரிய உதயத்திற்கு பிறகு பகலிலும் அதற்கான லக்ன நேரத்திலும் செய்ய வேண்டும். அபிஜித், பிரம்ம முகூர்த்தங்களில் திருமணம் செய்வது சரியல்ல. அவை சிறப்பான நேரம் என்பதும், முகூர்த்த நாளாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்பதும் தவறானது. அவசர, தவிர்க்க முடியாத, சந்தர்ப்ப சூழ்நிலைகளில் மட்டும் அந்த நேரங்களில் சுபகாரியங்கள் செய்யலாம்.

Similar Posts

  • தகவல்கள்

    தைப்பொங்கல்: தமிழக உழவர்களின் திருநாளே தைப்பொங்கல். மகர சங்கராந்தி என்கிற தை மாதம் பிறக்கும் நேரத்திற்கும் தைப்பொங்கலிடும் நேரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஜய வருட மகர சங்கராந்தி நள்ளிரவு 1.06க்கு நடக்கிறது. மகர சங்கராந்தியானது மலேசிய நேரப்படி இரவு எட்டு மணியாக கூட இருக்கலாம். அதனால் தைமாதம் முதல் தேதி என்றைக்கு குறிப்பிடப்பட்டு உள்ளதோ அன்று காலையில் பொங்கலிட்டு (சூ¡¢ய உதயத்திற்கு மேல் – மதியத்திற்குள், நல்ல நேரத்தில்) சூ¡¢யனுக்கு படைத்து வழிபட வேண்டும். அதை விடுத்து…

  • |

    பஞ்சாங்க அடிப்படைகள்

    பஞ்சாங்கம்கண்ணன் பஞ்சாங்கம் மலேசிய ஸ்டாண்டர்டு நேரப்படி கோலாலம்பூ¡¢ன் அக்ஷராம்சம், ரேகாம்சத்திற்கும் சூரிய உதயத்திற்கும் தக்கப்படி கணிக்கப்பட்டுள்ளது. அதனால் திதி, நட்சத்திரங்கள் முடியும் நேரங்கள், அவைகளை பின்பற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ள முகூர்த்த நாட்கள், பண்டிகைகள், விரதங்கள், விஷேசங்கள், சிரார்த்த திதி, அமாவாசை தர்ப்பணங்கள், திதித்வயம், திரிதினஸ்பிருக், அவமாகம் ஆகியவை இந்திய பஞ்சாங்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபடும். ஆனால் மலேசிய நேரப்படி இதுவே சா¢யானது. கண்ணன் பஞ்சாங்கம் சௌரமானப்படி தயா¡¢க்கப்பட்டது. சாந்திரமானக்காரர்கள் பயன்படுத்த வசதியாக சாந்திரமான மாதங்களும் பஞ்சாங்கத்தில் உள்ளது. சுக்லபட்சத்தை…

  • |

    பஞ்சாங்கங்களில் திருத்தம் அவசியம்

    பஞ்சாங்கங்களில் கிரக நிலைகள் மாறுபடக்கூடாது       நாம் வாழும் பூமியில் ஒரே ஒரு சூரியனும் ஒரு சந்திரனும் மட்டுமே உள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே சூரியன் இருக்க முடியும் ஆனால் இரண்டு இடங்களில் இருக்க முடியாது. சந்திரனும் மற்ற கிரகங்களும் அப்படித்தான். ஆனால் வெவ்வேறு பஞ்சாங்கங்களில் வெவ்வேறு இடங்களில் கிரக நிலைகள் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். துல்லியத்தில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும் என்று கருதலாம். கணிதத்தில் துல்லியமான மாறுபாடு…

  • |

    தமிழ் மாத தேதிகளை நிரந்தரமாக்க வேண்டும்

    தமிழ் மாத நாட்களின் எண்ணிக்கை நிரந்தரமாக இல்லாமல் ஒவ்வொரு வருடமும் மாறிக்கொண்டிருக்கிறது. நாட்களின் எண்ணிக்கை 29, 30, 31, 32 என பலவாறாக இருக்கிறது. தமிழ் வைகாசி மாதம் சில வருடங்களின் 31 நாட்களும் சில வருடங்களில் 32 நாட்களும் இருக்கும். மார்கழி, தை சில வருடங்களில் 29 நாட்களும் சில வருடங்களில் 30 நாட்களும் இருக்கும். எந்த வருடம் எந்த மாதம் எத்தனை நாட்கள் என கண்டுபிடிக்க எளிய வழிமுறை இல்லை. பஞ்சாங்க ஆசிரியர்கள் எதிர்வரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *